துவரங்குறிச்சி அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

66பார்த்தது
துவரங்குறிச்சி அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வகுத்தல்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவரது பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 5 அடி தண்ணீரில் தவறி விழுந்தது. உடனடியாக ராதாகிருஷ்ணன் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி கயிற்றின் உதவியுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி