கரூரை சேர்ந்த பாண்டியராஜன். இவர் கரூரிலிருந்து கிரானைட் கற்களை ஏற்றி செல்லும் செல்வபாரத் என்னும் டிரான்ஸ்போர்ட் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் மதுரையை சேர்ந்த சுதாகர் (26) என்பவருடன் பரமத்தியில் இருந்து மதுரை மாவட்டம் பூவந்திக்கு லாரியில் கல் லோடுகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறை To துவரங்குறிச்சி மாநில நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது துவரங்குறிச்சியை அடுத்த ஆத்துப்பட்டி பாலம் அருகே மேற்கண்ட லாரியை நிறுத்தி சொந்த அலுவல் காரணமாக இறங்கிய போது திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு M சாண்ட் லோடை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி வந்து மோதியதில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதையறிந்த துவரங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.