திருச்சி மாவட்டம் மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் எல்லைக்குட்பட்ட சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. மேலும் இதில் இப்பள்ளி மாணவிகள் மூலம் பொது மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.