மணப்பாறையை அடுத்த அனுக்காநத்தம் அருகே பழையக்கோட்டையை சேர்ந்த குருமூர்த்தி (55). இவர் தனது சொந்த ஊரான அனுக்காநத்தத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது தோட்டத்திற்கு சாணத்தை எடுத்துகொண்டு வயலில் கொட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து சாணத்தை எடுத்து கொண்டு வயலில் கொட்டிவிட்டு திரும்பி பார்த்த போது மீட்டர் பாக்ஸ் திறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து உள்ளே பார்த்த போது பாக்ஸில் இருந்த வயரை அறுத்து எடுத்த நிலையில் இருந்துள்ளது. அப்போது ஒரு நபர் பிளாஸ்டிக் பையுடன் சந்தேகமாக நடந்து சென்றதாகவும், வாதி அந்த நபரை நிற்கச்சொல்லி சத்தம் போட்டதும் எதிரி நிற்காமல் ஓடியதால் தனது இருசகக்கர வாகனத்தில் துரத்தி சென்று பிடித்து விசாரித்த போது விடத்திலாம்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சந்திரன் என்பதும் இவர் தான் குருமூர்த்தி தோட்டத்தில் மோட்டாருக்கு பயன்படுத்திய மின் வயரை திருடி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சந்திரன் வையம்பட்டி காவல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் சந்திரனிடம் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.