திருச்சி: செயல் அலுவலர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

74பார்த்தது
திருச்சி: செயல் அலுவலர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
மணப்பாறை அருகே உள்ள ராயம்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன் மனைவி ஜானகி மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பிரசவத்துக்காக திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

மருத்துவமனையில் கவனக்குறைவால் மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வேறு மருத்துவமனையில் காட்டி சிகிச்சை செய்து கொள்ள வலியுறுத்தியது. இதனால் ஜானகி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது மறுநாள் தீவிர மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஜானகி உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து கணவர் அன்பழகன் கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது திருச்சி நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவனக்குறைவாக சிகிச்சையால் உயிரிழந்த ஜானகியின் குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி