மணப்பாறை அடுத்த சத்திரப்பட்டி அருகே ராம்ஜி நகர் பகுதியில் கள்ளத்தனமாக கிராவல் மணல் அள்ள படுவதாக ரகசிய தகவல் ராம்ஜி நகர் போலிசாருக்கு கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீரங்கம் வட்டம் சன்னாசி பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆகிய இருவரும் TN45 BC1740 பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியில் கள்ளத்தனமாக கிராவல் மணல் ஏற்றி வந்த போது போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.