திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை ஆன்லைன் மோசடி புகாரில் சிக்கிய இவரை திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். விசாரணைக்குப் பயந்த ராஜதுரை மலேசியாவுக்குத் தப்பிச் சென்றார். அவரைப் பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளின் உடைமைகளைப் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ராஜதுரையின் பாஸ்போர்ட்டுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் பேரில் அவரை மடக்கி அதிகாரிகள் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசுக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் ராஜதுரையைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.