காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடுவெட்டி பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மணல் ஏற்றிக்கொண்டு வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது பொலிரோ பிக் அப் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடினர்.
இதை அடுத்து வாகனத்தை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மணலுடன் கூடிய பொலிரோபிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய காடுவெட்டியைச் சேர்ந்த ராகேஸ்வரன் பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.