திருச்சியில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.என். நேரு பங்கேற்றார். இந்தி திணிப்பு - தொகுதி மறுசீரமைப்பில் அநீதி – தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் உறையூர் குறத்தெருவில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜானகிராமன், முஹம்மது ஆசிப், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முஹம்மது சாதிக், கழக இளம் பேச்சாளர்கள் மில்டன், சிந்துநதி ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.