மணப்பாறை: வாலிபரிடம் செல்போன் பறித்த நான்கு பேர் கைது

77பார்த்தது
மணப்பாறை: வாலிபரிடம் செல்போன் பறித்த நான்கு பேர் கைது
மணப்பாறை வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே. புதுக்கோட்டை கிராமம் துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் இவர் துலுக்கம்பட்டிக்கு செல்லும் ரயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பதிவெண் இல்லாத காரில் வந்த நான்கு நபர்கள் காரை அவரது அருகில் நிறுத்தி, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை மட்டும் பிடுங்கி கொண்டு சென்று விட்டனர். பின்னர் சங்கர், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் செல்போனை தேடிச் சென்ற திருடர்களை விரட்டி பிடித்து வையம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வேடசந்தூரைச் சேர்ந்த வசந்தகுமார், மாரிமுத்து, சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் திருவானைக்கோவிலைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி