நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

76பார்த்தது
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா!

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம் உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. இளங்கலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம்
வெளியிடப்பட்டது.

இதில் திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 6 பேர் 685 மற்றும் 700 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் டி. சஸ்மிதா 705 மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் 1039 வது இடத்தையும், ஜோனஸ் ஜே 700 மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் 2054 வது இடத்தையும், காயத்ரி 700 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 1813 வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல 675 மதிப்பெண்களுக்கு மேல் மூன்று மாணவர்கள் பெற்றுள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி