சமயபுரம் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் மதுபான கடை ஒன்றின் பாரில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் நேற்று சரணடைந்தார்.
சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் 28 வயதான பாபு. இவர் சமயபுரம் கடைவீதியில் மாலை கட்டும்
வேலை செய்து வந்தார். கடந்த 6 ம் தேதி இரவு சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் மது அருந்து கொண்டிருந்தபோது 5 க்கும. மேற்பட்ட நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான வீ. துறையூைர சேர்ந்த வெங்கடேசன், கணேசன், விநாயகமூர்த்தி ஆகியோர் கடந்த 9 ம் தேதி நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் ராஜீவ்காந்தி, அருண், ராமு, அலெக்ஸ், லெட்சுமணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். , இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 21 வயதான வள்ளிஅருணனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் நீதிபதி பாலாஜி முன்பு நேற்று சரணடைந்தார். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.