அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 25.3.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் தன்சிங் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ப. செந்தில்நாதன் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடந்து முடிந்த திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து பணியாற்றிய திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி செயலாளர்கள் கமருதீன், வேதாந்திரி நகர் பாலு, உமாபதி, ஏர்போர்ட் மதியழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஆணைக்கிணங்க கோடைக்காலத் தண்ணீர் பந்தல் திறப்பு சம்பந்தமாகவும், திருச்சி மேற்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடித்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.