திருச்சி மாவட்டம் குழுமணி அண்ணா நகரை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் குழுமனையில் உள்ள மட்டன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகத்தில் வந்த டூவீலர் ஒன்று அவர் மீது மோதும் படியாக வந்தது. இதனைத் தொடர்ந்து கவனக்குறைவாக அந்த டூவீலரை ஒட்டி வந்த குழுமணி மூலங்குடியை சேர்ந்த ஏழுமலை என்பவரை கண்டித்துள்ளார். அதற்கு ரவுடியான ஏழுமலை கத்தியை காட்டி அஜித் குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து
அஜித்குமார் அளித்த புகார் பேரில் ஜீயபுரம் போலீசார் ஏழுமலை மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர்.