திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல்நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு கம்பரசம்பேட்டை துணை மையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு நாளை குடிநீர் வினியோகம் இருக்காது. பிப்ரவரி 6ஆம் தேதி வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சி உடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.