திருச்சி மாவட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்ற லால்குடியை சேர்ந்த சூர்யபிரகாஷ்(23) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கல்லூரி அருகில் கஞ்சா விற்ற லால்குடி சேர்ந்த மனோஜ் பாரத் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.