இரண்டு டூவீலர்கள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி

60பார்த்தது
இரண்டு டூவீலர்கள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 35. இவர் மணச்சநல்லூர் எதுமலை சாலையில் அவரது டூவீலரில் ராசாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், சிலம்பரசன் ஒட்டி வந்த டூவீலர் மீது மோதியது எதிரெதிரே இரண்டு டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிலம்பரசன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்து அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணச்சநல்லூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய சிவக்குமார் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி