திருச்சி: உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

67பார்த்தது
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் ஒன்றாக விளங்குகிறது. மணல் மாரியிலிருந்து (மணல் மழை) உறையூர் மக்களை அம்மன் காப்பாற்றியதாக தல புராணம் கூறுகிறது. இங்கு உள்ள அம்மன் மேற்கூரை இன்றி வெட்டவெளியில் வீற்றிருந்து உலகை காத்து வருகிறார். இத்தனை‌சிறப்பு மிக்க இந்த கோவிலில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அன்று தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்

இந்த வருடத்திற்கான தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டான இன்று தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் காவேரியில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம், பால்குடம் போன்றவை, எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு குளிர்பானம் , அன்னதானம் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி