திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்

67பார்த்தது
திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்
திருச்சி மத்திய சிறைச்சாலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் மதுரை மாவட்டம், திடீர் நகரைச் சேர்ந்த வட்டசூர்யா (27) என்பவர் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட்டசூர்யாவிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

உயர் பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள் கைதிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? என சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சிறையில் பணியாற்றிய வார்டன் எழில்ராஜ் என்பவர் தான் கைதி வட்டசூர்யாவிற்கு கஞ்சா கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிறை அலுவலர் சண்முகசுந்தரம் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், கைதி வட்டசூர்யா மற்றும் சிறை வார்டன் எழில்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து சிறை வார்டன் எழில்ராஜை சஸ்பெண்ட் செய்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி