கன்னியாகுமரி வாலிபருக்கு ட்ரெண்டிங் ஸ்டார் விருது

755பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் ட்ரெண்டிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சோசியல் மீடியாவில் தங்களது கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜோகித் ஜோஸ் (20) என்ற மாணவருக்கு சிறந்த பாடகருக்கான விருது பெற்றார்.
இவர் சென்னையில் உள்ள ஜே. பி. ஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் பி. டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
தனது ஓய்வு நேரங்களை சமூக வலைதளங்களில் அனைத்து வகையான பாடல்களை பாடி ட்ரெண்டிங் செய்து வந்த நிலையில் இவருக்கு சிறந்த ட்ரெண்டிங் ஸ்டார் விருது வழங்கப்பட்டது. விருதை பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய
வரும் பெற்றோர், கல்லூரி நிர்வாகம் மற்றும் சமூக ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி