திருச்சி மாவட்டம் மணப்பாறையில்
தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின்
மாநில பேரவை சார்பில் ஆலோசனைக்கூட்டம் இன்று நல வாரிய நிர்வாகக்குழு உறுப்பினர் சிங்காரவேலன், தலைமையில் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பயணியர் விடுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது சங்கரதாஸ் சுவாமிகளின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழா நடத்துவது சம்பந்தமாக நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.