சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மர கன்றுகள் வழங்கும் விழா

84பார்த்தது
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மர கன்றுகள் வழங்கும் விழா
சுற்றுச்சூழல் தினம் மரக்கன்று வழங்கும் விழா திருச்சி மாவட்டம்  தொட்டியத்தில் அடுத்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி  ஐந்தாம் வகுப்பு நிறைவு பெற்று பள்ளியில் மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 
பாலசமுத்திரம் பசுமை அமைப்பின் சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொட்டியம் வட்டார கல்வி அலுவலர்  ம. தமிழ்ச்செல்வன் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி அனைத்து மாணவர்களும் மரம் வளர்ப்போம் என்ற உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிகழ்வில் பசுமை அமைப்பு சீனிவாசன், பன்னீர்செல்வம், திருநாராயணபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன்  மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஆசிரியர் மோகன் ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி