மாணவியிடம் அத்துமீறல் தனியார் பள்ளிஆசிரியர் போக்சோவில் கைது

67பார்த்தது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டியை சேர்ந்த லாரன்ஸ்(57) என்பவர், இப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு மருத்துவம் படிக்க நீட் தேர்வு சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி அவரை வரவழைத்து நெருங்கி பழகியுள்ளார்.
மகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். நடந்த விஷயத்தை அவர் கூறியவுடன் அதிர்ச்சியடைந்தனர். மாணவியின் தாயார் லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் அழகம்மை, உதவி ஆய்வாளர் இசைவாணி ஆகியோர் ஆசிரியரை போக்சோவில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி