அய்யாகண்ணுவை வீட்டுக் காவலில் சிறை வைத்த போலீசார்

66பார்த்தது
வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்திற்கு‌ இரண்டு மடங்கு லாபம் வழங்கிட வேண்டும். மரபணு மாற்று விதையை
அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க இருந்தனர். இந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட திருச்சி மாநகர காவல்துறையினர் விவசாயிகளை செல்ல விடாமல் தடுத்து வீட்டு காவலில் அடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, எங்களை டில்லி செல்ல விடாமல் மத்திய பிரதேசம், சென்னை, திருச்சி என அனைத்து இடங்களிலும் மறிக்கிறார்கள். தற்போது எங்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எங்களது கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார்கள். இது ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா என தெரியவில்லை. நாங்கள் கேட்க விரும்புவது மத்திய அரசை தான். கர்நாடக அரசு தமிழகத்தை வெள்ளம் வடியும் மாநிலமாகத்தான் பார்க்கிறார்கள். தற்போது அனைத்து நீரும் வீணாக கடலில் தான் போய் சேர போகிறது. எனவே தமிழக விவசாயிகளை காப்பாற்றுவதற்காக டெல்லியில் வருகிற 21 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி