திருச்சியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் காரில் சபரிமலைக்கு சென்று விட்டு இன்று மாலை திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறையை வையம்பட்டி அருகே நடுப்பட்டி சென்ற போது அவ்வழியே நடுப்பட்டி அருகே கல்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் டூவீலரில் வந்த அவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த வையம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.