தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணமேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை மேற்கொண்ட போது அங்கு ஸ்ரீதர் என்பவர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விமல் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து அவரிடம் இருந்து 2,150 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.