கர்நாடக மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து காவிரியில் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து காவிரியில் வரும் தண்ணீர் முழுமையாக 16 கண் பகுதி வழியாக முழுமையாக பிறந்து விடப்படுகிறது. தற்போது மாயனூர் சீலைப் பிள்ளையார் புதூர் தடுப்பணையிலிருந்து காலையில் சுமார் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் காவிரி ஆற்றிற்கு துணி துவைக்கவும் குளிக்கவும் மீன்பிடிக்கவும் ஆடு மாடுகள் மேய்க்கவும் செல்லக்கூடாது எனவும் காவிரி கரையோரத்தில் மேடான பகுதியில் இருந்து செல்பி எடுக்கவும் தடை விதித்துள்ளார். இதையடுத்து முசிறியில் பரிசல் துறை ரோடு அக்ரஹாரம் ஆகிய படித்துறை பகுதிகளில் மக்கள் குளிக்க செல்லா வண்ணம் தடுப்பு சுவர் முசிறி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அது சமயம் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார் நகர அமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்கும்படி நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி மற்றும் நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளனர்.