துறையூர் வட்டாரம் பச்சைமலை கிராம பகுதிகளில் விவசாயிகளின் வயல்களில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் நிலக்கடலை செயல் விளக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 50 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடிக்கு தேவையான நிலக்கடலை விதை, நிலக்கடலை விஸ்பூஸ்டர் உயிர் உரம், வேப்பெண்ணெய் மற்றும் மண்புழு உரம் போன்ற இடுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வயல்களை சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு மற்றும் இணை பேராசிரியர் மாரிமுத்து வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வேண்டிய தொழில்நுட்பங்களை வழங்கினர்.