அதிக கடன் சுமையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

75பார்த்தது
அதிக கடன் சுமையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சம்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் வயது 39. இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடன் சுமை அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பூமிபாலனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்தி