திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரணி, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சுரேஷ், நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.