மர்மமான முறையில் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

5581பார்த்தது
மர்மமான முறையில் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்
லால்குடி அருகே கூகூர் தண்ணீர் பந்தல் கொள்ளிடம் ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக லால்குடி போலீஸ் நிலையத்திற்கு தக வல்கிடைத்தது. அதன்பேரில் லால்குடி போலீசார் மற்றும் லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ், தலைமையில் பிரபு மணிகண்டன். விஜய் அமிர்தராஜ், சுரேஷ் ஆகிய தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆண் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி