மாநில அரசை கண்டித்து சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பயணியர் மாளிகை முன்பு சிபிஐ கட்சியின் சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமையில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று உள்ளிட்டவைகள் குறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் இதில் கலந்து கொண்ட மாநில கிளர்ச்சி பிரச்சாரக் குழு த. இந்திரஜித் கண்டன உரை ஆற்றினார். இந்த நிகழ்வில் மணப்பாறையை சுற்றியுள்ள ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி