வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் பணம் கொள்ளை

1835பார்த்தது
வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் பணம் கொள்ளை
மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோவில் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் 44 வயதான அர்ஜுனன். இவர் பழனியப்பா நகரில் கடந்த 5 வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த 7 ம் தேதி தலைமலையில் உள்ள பெருமாள் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் தகர உண்டியலில் இருந்த ரூ. 90, ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அர்ஜுனன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தைச் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி