திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவர் உத்தரவின் பெயரில் 'தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள்' என்ற தலைப்பின் பேரில் இன்று பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் பொது இடங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.