ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகுளரி கிருஷ்ணமூர்த்தி. இவரது 19 வயதான மகள் மகுளரி நெகஸிதா திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக அனுமதி கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் இவர் கல்லூரி விடுதிக்கு திரும்பாததால், கல்லூரி நிர்வாகத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சிக்கு வந்த அவரது பெற்றோர்தனது மகளை காணவில்லை என சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.