காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில் அங்கிருந்த மின் கோபுரம் ஒன்று நீரின் வேகம் மற்றும் மண்ணரிப்பு காரணமாக சாய்ந்து கீழே விழும் நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்யும் முயற்சியில் மின் ஊழியர்கள் கயிறு கட்டிக் கொண்டு ஆற்றை கடந்து செல்லும்போது திடீரென கயிறு அறிந்தது குளியல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மின் ஊழியரும் தீயணைப்பு வீரரும் தண்ணீரில் தத்தளித்தனர். மின் கோபுரத்தில் இருந்த மின் ஊழியர் தனது சாமர்த்தியத்தால் கயிறு பிடித்துக் கொண்டதால் மின் ஊழியரும் சக ஊழியர்களின் முயற்சியில் காப்பாற்றப்பட்டனர்.