திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பிரம்பையின் மகள் பிரியா வயது 19. இவர் நேற்று இரவு 1:30 மணி அளவில் தனது உறவினர் மதன் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அதிவேகமாக வந்த பஸ் அவரது பைக்கில் மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மதன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் பிரியாவின் உடலை மீட்டு விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.