வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் திருட்டு

85பார்த்தது
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் திருட்டு
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் ராஜகோபால் நகர் முதல் கிராசை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 30. இவர் வழக்கம் போல் இரவு தனது ராயல் என்ஃபீல்டு புல்லட்டை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் புல்லட் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வந்து பார்த்தபோது அங்கு அவரது புல்லட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து சம்பவம் குறித்து அவர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி