திருச்சி விமான நிலையத்தில் 1042 கிராம் தங்கம் பறிமுதல்

78பார்த்தது
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானப் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட 682 கிராம் தங்கம் மற்றும் மற்றொரு பயணி ஆடையில் மறைத்து எடுத்து வந்த 360 கிராம் தங்கம் என மொத்தம் 1042 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு சுமார் ₹79 லட்சம் என கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி