அரசு பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி.. 2 பேர் பலி

60பார்த்தது
அரசு பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி.. 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் சென்ற அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி ஒன்று மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தூர் புறவழிச் சாலையில் சென்ற அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், டிப்பர் லாரி ஓட்டுநர் குமார், பேருந்து ஓட்டுநர் பரமசிவம் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி