டிக்டாக் பிரபலம் கேபி லேம் (Khaby lame), விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாகக் கூறி, சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு, பிறகு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்த இவர், அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதித்ததால் கைதுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு டிக் டாக்கில் 16.2 கோடி ஃபாலோவர்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.