பீஜப்பூர்
சுல்தான் அப்சல் கானின் சூழ்ச்சியை வென்று, மராட்டியர்களின் வீரத்தை சிவாஜி நிலைநாட்ட உதவிய வாக் நாக் விரைவில்
இந்தியா திரும்புகிறது. விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம் ஆனது மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற 'புலி நகம்' என்ற ஆயுதத்தினை இந்திய அரசு 3 ஆண்டுகளுக்கு மும்பை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்த முடியும். இந்த ஆயுதம் ஆனது, ஒரு காலத்தில் மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜி அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த 'புலி நகங்கள்' வாக் நாக் என்றும் அழைக்கப் படுகின்றன.