கோடை வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்த நிலையில், சென்னையின் பல இடங்களில் தற்போது இடி, மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது. மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், மாதவரம், சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.