அநாதையாக சுற்றுபவர்கள் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் இன்று (ஜன., 24) பேசிய அவர், கட்சித் தொடங்கியதும் அடுத்தது எங்கள் ஆட்சி என சிலர் கூறுகிறார்கள். அந்தக் கட்சியின் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை. திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. மாற்றுக் கட்சியினரை அழைத்து வாருங்கள், வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.