தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திகை ராஜ் என்பவரின் மனைவி முத்துச்செல்வி (26), இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், மன வருத்தத்தில் இருந்து வந்த முத்துச்செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடலை கைப்பற்றிய எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.