தூத்துக்குடியில் மீனவர் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீல்சேர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மீனவர் மக்கள் சேவை நிர்வாகிகளாக கிளாரன்ஸ், வெங்கடேஷ் ஆகியோர் அமைந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. தங்களது ஏழ்மையிலும் இவர்கள் பிறருக்கு உதவி செய்து வருகின்றனர்.
கொரோனா காலங்களில் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய இவர்கள் தற்போது தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் செல்வி என்பவருக்கு இலவச வீல்சேரை வழங்கினர். ஏழ்மையிலும் இயன்ற உதவிகளைச் செய்துவரும் இவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.