விளாத்திகுளம் அருகே துர்க்கையம்மன் கோவிலில் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்கினிச்சட்டி ஊர்வலம் சென்று வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசக்கணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் மற்றும் செண்பக விநாயகர் கோவிலின் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் விநாயகருக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு விஷேச திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இருந்து பட்டாசுகள் வெடித்து, வானவேடிக்கை, நையாண்டி மேளதாளம் முழங்க கோலாகலமாக அக்கினிச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வைகாசி மாத கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.