தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக காப்பீட்டு தொகை சரிவர வழங்கவில்லை. மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வேளாண்துறை, காப்பீட்டு நிறுவனம், வருவாய்த்துறை ஆகியவை கணக்கெடுத்ததில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். தமிழக அரசு 2021-22, 2022-23-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ. 560 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.