மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சிறப்பு வழிபாட்டை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார். சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார். கோவில்பட்டி, தூத்துக்குடி, கழுகுமலை, விளாத்திகுளம், நாகலாபுரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், முத்துசாமிபுரம், எட்டையபுரம், பிள்ளையார்நத்தம், எம்.ஜி.ஆர். நகர் உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணிந்து வருகின்றனர்.