விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்

60பார்த்தது
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்பு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது இதை அடுத்து பள்ளிகளுக்கு இன்று மாணவ மாணவிகள் புத்தாடை அணிந்து உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் பெருமக்கள் இனிப்பு மற்றும் பலூன் ஆகியவற்றை வழங்கி மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர் இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர் இதைத்தொடர்ந்து பள்ளி பேரவை கூட்டம் நடைபெற்று மாணவர்கள் வகுப்பறைக்கு உற்சாகமாக சென்றனர் பின்னர் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியருக்கு புத்தகம் வழங்கப்பட்டது

கோடை விடுமுறைக்குப் பின்பு பள்ளி திறந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நண்பர்கள் மற்றும் புதிய ஆசிரியர்களை பார்ப்பது சந்தோஷமாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்

இந்நிலையில் தூத்துக்குடி ஜின்பாக்டரி ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு மேளதாளம் வழங்க மலர் தூவி நெற்றியில் திலகமிட்டு எழுதுகோல் கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி